மாருதி சுசூகி நிறுவனத்தின் சியாஸ் காரில் கூடுதலான பாதுகாப்பு வசதிகளை சேர்த்துள்ளதால் காரின் விலை ரூ.16,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ESP மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவற்றை ஆட்டோமேட்டிக் வகைகளில் மட்டுமே பெற்றுள்ள சியாஸ், இப்போது அனைத்து வகைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
சியாஸ் காரில் ABS, ISOFIX குழந்தை இருக்கைகள் மற்றும் இரட்டை முன் ஏர்பேக்குகளுடன் தொடர்ந்து வழங்கப்படுகிறது. அதன் பெரும்பாலான போட்டியாளர்கள் ஆறு ஏர்பேக்குகளை குறைந்தபட்சம் அவற்றின் டாப் வேரியண்டில் வழங்கும் நிலையில் மாருதி இரண்டு மட்டுமே வழங்குகின்றது.
மாருதி சுஸுகி மூன்று டூயல் டோன் பெயிண்ட் ஆப்ஷன்களுடன் சியாஸை வழங்குகிறது – மெட்டாலிக் ரெட் , மெட்டாலிக் கிரே மற்றும் Dignity Brown என அனைத்தும் கருப்பு நிற கூரையுடன் வழங்கப்படுகிறது. டூயல்-டோன் ஆப்ஷன் டாப்-ஸ்பெக் ஆல்ஃபா வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது மற்றும் சாதாரன நிலை மாடலை விட ரூ.16,000 உயர்த்தப்பட்டுள்ளது. டூயல்-டோன் ஆல்ஃபா மேனுவல் விலை ரூ.11.15 லட்சமாகவும், ஆட்டோமேட்டிக் வேரியன்டின் விலை ரூ.12.35 லட்சமாகவும் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சியாஸ் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்ட 105 ஹெச்பி, 1.5 லிட்டர் K15C பெட்ரோல் எஞ்சின் மூலம் தொடர்ந்து இயக்கப்படுகிறது. இந்த எஞ்சின் மைல்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வருகிறது, மேலும் இந்த மேனுவல் 20.65 kpl மைலேஜ் மற்றும் தானியங்கி 20.04kpl மைலேஜ் வழங்கும் என்று மாருதி குறிப்பிட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் விர்டஸ், ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஹோண்டா சிட்டி போன்ற புதிய கார்களுடன் போட்டியிடுகிறது. புதிய தலைமுறை ஹூண்டா வெர்னா காருக்கு போட்டியாக அமைய உள்ளது.