டெல்லி: நாடு முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கியது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 21,86,940 மாணவர்கள் எழுதுகின்றனர். இதில், 12,47, 364 பேரும், மாணவிகள் 9, 39, 566 பேரும், இதர பிரிவினர் 10 பேரும் தேர்வு எழுதுகின்றனர். சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக நாடு முழுவதும் 7,240 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 39 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நாடு முழுவதும் 16,96,770 மாணவர்கள் எழுதுகின்றனர். இதில், மாணவர்கள் 9,51,332 பேரும், மாணவிகள் 7,45, 433 பேரும் உள்ளனர். 6,759 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 115 பாடங்களுக்கு 36 நாட்கள் தேர்வு நடைபெறுகிறது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 21 வரையும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5 வரையும் நடைபெறுகிறது. மொத்தம் 24,491 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். மேலும் 26 வெளிநாடுகளிலும் சிபிஎஸ்இ பொது தேர்வுகள் நடைபெறுகின்றன. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், அனைத்து பாடங்களுக்கிடையே போதிய நாட்கள் இடைவெளி வழங்கப்பட்டிருப்பதாக சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது.