துருக்கியின் சமன்டாக் நகரில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கித் தவித்த நாய் 8 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
இடிபாடுகளில் இருந்து நாயை மீட்ட மீட்புக் குழுவினர், அதனை அரவணைத்து தூக்கிச் சென்றனர்.
நாயின் உரிமையாளர்கள் கடந்த 2020ம் ஆண்டு இஸ்மிர் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்து, ஹடாய் மாகாணத்துக்கு வந்துள்ளனர்.
ஆனால், தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி அவர்கள் பலியானதாக இஸ்தான் புல் மேயர் தெரிவித்துள்ளார். துருக்கி மற்றும் சிரியாவில் இறப்புகள் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது