2023 பிப்ரவரி 18-ம் நாள் சனிக்கிழமை அன்று மகாசிவராத்திரி விழா. இந்தத் திருநாளில் நான்கு கால பூஜைகளும் நான்கு பாடல் பெற்ற தலங்களில் நடைபெற உள்ளன.
அஷ்டாங்க யோகமும் கைகூடும் அற்புதத் திருநாள் மகா சிவராத்திரி. பக்தி, ஸித்தி, முக்தி எனும் மூன்று நிலைகளையும் அடைய உதவும் ஒரே திருநாள் மகாசிவராத்திரி. இந்நாளில் தேவர்கள் உள்ளிட்ட சகல ஜீவராசிகளும் ஈசனைத் துதித்து பல பேறுகள் அடைந்திருக்கிறார்கள் என்கின்றன புராணங்கள்.
சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர், சுந்தரநாதர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், சிவயோக மாமுனி ஆகிய 8 கயிலாயப் பரம்பரை ஆதிமுனிவர்களும் முக்தி பெற்றது மகாசிவராத்திரி நாளில்தான். திருமூலர் திருவாவடுதுறை கோயிலின் படர் அரசு மரத்தின் கீழ் தவமிருந்து ஆண்டுக்கு ஒருமுறை கண்விழித்து ஒரு திருமந்திரம் பாடியதும் இந்நாளே. கண்ணப்ப நாயனார் முக்தி கொண்டதும், மார்க்கண்டேயன் உயிர் மீண்டதும், பகீரதன் கங்கையை பூமிக்குக் கொண்டு வந்ததும், அர்ஜுனன் பாசுபதம் பெற்றதும் இந்நாளில்தான்.
விவரம் அறியாத வேடன் வில்வ இலைகளைக் கிள்ளி சிவலிங்கத்தின்மீது போட்டு, கண் விழித்திருக்க, அவனே குகனாக மறுபிறப்பு எடுத்ததும் மகாசிவராத்திரி நாளால்தானே! எண்ணியவை யாவையும் அள்ளித்தரும் இந்த மகத்தான நாளில் மூன்றாம் கால பூஜையை திருவிடைமருதூர் திருத்தலத்தில் நடத்த உள்ளது சக்தி விகடன். இந்த ஆண்டு 2023 பிப்ரவரி 18-ம் நாள் சனிக்கிழமை அன்று மகாசிவராத்திரி நாளில் சக்தி விகடன் வாசகர்கள் பயன் அடையும் விதம், அவர்களின் குடும்பத்தாரும், சுற்றத்தாரும், நண்பரும் நன்மைகளையும் பெறும் பொருட்டு, திருவாவடுதுறை ஆதினத்துக்கு உட்பட்ட பிரசித்திபெற்ற 4 சிவாலயங்களில், சிறப்பு சங்கல்பப் பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அவை…
முதல் காலம்: தென் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ஆலயம்
2-ம் காலம்: திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் ஆலயம்
3-ம் காலம்: திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயம்
4-ம் காலம்: திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயம்.
தேவாரப் பாடல் பெற்ற இந்த திருத்தலத்தைப் பற்றி நீங்கள் ஏற்கெனவே அறிந்து இருக்கலாம். எண்ணியவை யாவையும் அருளும் இந்த சிறப்புச் சங்கல்ப வழிபாட்டில் நீங்களும் சங்கல்ப முன்பதிவு செய்து உங்கள் பிரார்த்தனையைச் சமர்ப்பிக்கலாம். அதுசரி மூன்றாம் கால பூஜையை ஏன் திருவிடைமருதூரில் நடத்துகிறோம். அங்கு என்ன விசேஷம் என்று பார்ப்போம்.
சக்திதேவி, விஷ்ணு, நவகிரகங்கள், 27 நட்சத்திரங்கள், ருத்திரர், பிள்ளையார், முருகர், வரகுணபாண்டியன், பிரம்மன், அகத்தியர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்த்தேவர், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார் என இந்த ஆலயத்து இறைவனை தொழுதவர்கள் அநேகம். மருத மரத்தின் அடியே வீற்றிருக்கும் ஈசனை தலை மருது (மல்லிகார்ஜுனம்-ஸ்ரீசைலம்), இடை மருது, கடை மருது (புடார்ஜுனம்-திருப்புடைமருதூர்) என்று போற்றுவர். இதில் இடையில் அமைந்த மருதூராகத் திகழ்கிறது திருவிடைமருதூர்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
செண்பகாரண்யம், மருதபுரம், சத்திபுரம், தபோவனம், அர்ஜூனாவனம், ஜோதிநகர், சர்வதீர்த்தபுரம், மத்யகயிலை, தருமவிருத்திபுரம், வீரசோழநகரம், முத்திபுரம், பூலோக சிவலோகம் என்றெல்லாம் போற்றப்படும் இந்த ஊர், காசிக்கு நிகரான 6 ஆலயங்களில் ஒன்று. இங்குள்ள மகாலிங்கேஸ்வரர் போற்றிய சுயம்பு லிங்க மூர்த்தி. எனவே இங்கு வருவோர் பெரும் அதிர்வுகளை கண்டுகொள்ளலாம் என்பது சிறப்பு. மேலும் இங்குள்ள மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்வது மிகுந்த பலன்களை தரும். கருவறைச் சுற்றில் ஆண்ட விநாயகர் உள்ளார். இவரே முதன்முதலில் மகாலிங்க ஸ்வாமியை வழிபட்டவர். ஈசன் இங்கே தாமே தனக்கு முதன்முதலாக பூஜித்துக் கொண்டு தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் பூஜா விதிகளைக் கற்றுக் கொடுத்தாராம்.
ஆலயத்தின் இரண்டாவது பிராகாரத்தில் அம்பிகை அன்பிற்பிரியாளுக்கு தனி சந்நிதி உள்ளது. பிருகசுந்தரகுஜாம்பிகை, பெருநலமுலையம்மை என்றும் இவளைப் போற்றுகிறார்கள். இவள் திருமண வரம் அளிக்கும் தயாபரி என்கிறார்கள்.அம்பிகை சந்நிதிக்கு வெளியே மூகாம்பிகை சந்நிதி இருப்பதும் இங்கு மட்டுமே.
மாடவீதிகளின் நாற்புறமும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் கோயில்கள் அமைந்து நடுவிலே மகாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இது பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது. ஒருநாள் முழுக்கச் சுற்றி பார்க்கும்படியான எண்ணற்ற சந்நிதிகளும் அழகிய மண்டபங்களும் கொண்டு விளங்குகிறது இந்த ஆலயம். இங்கு கனக தீர்த்தம், கல்யாண தீர்த்தம், ஐராவத தீர்த்தம், காவிரி, காருண்ய அமிர்த தீர்த்தம் என 32 தீர்த்தங்கள் உள்ளன. மருதமரம் தலவிருட்சம். இது பத்ரகிரியார் முக்தி பெற்ற திருத்தலம்.திருவிடைமருதூரை மையமாக வைத்தே மற்ற 7 பரிவாரத் தலங்கள் அமைந்துள்ளன.
வரகுணபாண்டியனின் பிரம்மஹத்தி தோஷத்தையும், வீரசேன மன்னனின் பிரம்மஹத்தி தோஷத்தையும் அகற்றிய தலம் திருவிடைமருதூர். இதனால் இது சகல தோஷங்களையும் நீக்கும் தலமாக விளங்குகிறது. இங்குள்ள பிரம்மஹத்தியை வணங்கினால் மனநலம் ஓங்கும், மருத்துவத்துக்கும் கட்டுப்படாத நோய் தீரும், தெரியாமல் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும், உத்தியோகத் தடை நீங்கும், கணவன்-மனைவி பிரச்னை தீரும், தொழிலில் நஷ்டம் மறையும், புத்திர சோகம் தீரும்.
மிக மிக அற்புதமான இந்த திருவிடைமருதூரில் நிகழும் மகாசிவராத்திரி வழிபாட்டில் நீங்களும் சங்கல்பித்துப் பிரார்த்திப்பதன் மூலம் சிவனருள் கைகூடும். சகல காரியங்களிலும் வெற்றி பெறலாம். காரிய ஸித்தி கிட்டும். கிரக தோஷங்கள், தீவினைகள் நீங்கும். தீரா கடன் பிரச்னைகளில் இருந்தும் விடுபடலாம். தீராத நோய்கள் தீரும், மனஅமைதி கிட்டும். ஓயாத உழைப்பால் சலிப்பு கொண்டோருக்கு அமைதியும் மகிழ்வும் அளிக்கும். குழந்தைப்பேறு உண்டாகும். விரயச் செலவுகள் நீங்கும். ஆரோக்கியம், ஆயுள், செல்வம், மணப்பேறு,பதவி உயர்வு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட சகல நன்மைகளும் கிட்டும். நிம்மதியான வாழ்வு கிட்டும். உறவுப் பிரச்னைகள் நீங்கும், சொந்தங்களின் பகை தீரும். சொத்து தொடர்பான தொல்லைகள் நீங்கும், கடன் தொல்லைகள் நீங்கும் என்கிறார்கள்.
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்ப வழிபாட்டுக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், பெயர் நட்சத்திரத்துடன் சிறப்பு வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு நான்கு திருத்தலங்களின் விபூதிப் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்).
தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404