சென்னை: இந்தியாவிலிருந்து ரூ.30,000 கோடி மதிப்புள்ள ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் ஏற்றுமதி செய்து முதலிடத்தை பிடித்துள்ளது. 2022, 2023ம் நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் ரூ.30,000 கோடி மதிப்புக்கு ஐபோன்கள் ஏற்றுமதி ஆகி உள்ளது. இந்தியாவின் மொத்த ஸ்மார்ட் போன்கள் ஏற்றுமதி மதிப்பான ரூ.70,000 கோடியில் ஐபோன்களின் பங்கு மட்டும் 40% ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.