விடுதலைப்புலிகளின் தலைவர் உயிரோடு! ராஜபக்சவினரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த இரகசிய திட்டம்


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமாக இருப்பதாகவும், உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார் எனவும், ஆனால் எங்கு உள்ளார் என்பதினை தற்போது அறிவிக்க இயலாது’ எனவும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.

பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரபாகரன் உயிருடன் இல்லை என்று இலங்கை இராணுவம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

மேலும், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லை. 2009 மே 18ல் நடந்த இறுதிகட்ட போரில் அவர் உயிரிழந்ததற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என்று இலங்கை இராணுவம் மறுப்பு வெளியிட்டிருந்தது.

இதற்கமைய, பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து அரசியல் தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

விடுதலைப்புலிகளின் தலைவர் உயிரோடு! ராஜபக்சவினரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த இரகசிய திட்டம் | Ltte Leader Prabhakaran Is Alive India Srilanka

மீண்டும் அரசியலில் ராஜபக்ச குடும்ப ஆதிக்கம்

எனினும், பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் வெளியிட்ட கருத்தின் மூலம், ராஜபக்ச குடும்பம் மீண்டும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்றும் சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு ஆட்சி பீடம் ஏறிய மகிந்த ராஜபக்ச 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக இல்லாதொழித்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

விடுதலைப்புலிகளின் தலைவர் உயிரோடு! ராஜபக்சவினரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த இரகசிய திட்டம் | Ltte Leader Prabhakaran Is Alive India Srilanka

இந்த காலக்கட்டத்தில் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ச மற்றும் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோரே விடுதலைப்புலிகளை முற்றாக அழித்து அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தியதாக சிங்கள மக்கள் மத்தியில் போற்றப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையை பயன்படுத்தி 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச மக்கள் ஆதரவுடன், ஜனாதிபதியாக ஆட்சிபீடத்தை கைப்பற்றியிருந்தார்.இவரின் இந்த வெற்றிக்கு விடுதலைப்புலிகளின் பின்னடைவு பிரதான காரணமாக அமைந்திருந்தது.

விடுதலைப்புலிகளின் தலைவர் உயிரோடு! ராஜபக்சவினரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த இரகசிய திட்டம் | Ltte Leader Prabhakaran Is Alive India Srilanka

ஆட்சிப்பீடத்தை கைப்பற்றுமா?

எனினும், காலப்போக்கில் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச ஆட்சியே காரணம் என தெரிவித்து, கடந்த ஆண்டு போராட்டங்களின் ஊடாக ராஜபக்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து அமைதிக்காத்த ராஜபக்ச குடும்பத்தினர் தமது அரசியல் நடவடிக்கைகளை தற்போது மீண்டும் முன்னெடுத்து வரும் நிலையில் பழ.நெடுமாறனின் கருத்தை பயன்படுத்தி, ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சிப்பீடத்தை கைப்பற்றுமா என்ற சந்தேகம் நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் இரகசிய புலனாய்வு

இதேவேளை,இந்தியா தனது அரசியலை தக்கவைத்துக்கொள்ள அண்டைய நாடுகளின் அரசியல் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதுடன், இலங்கையின் அரசியல் விடயம் தொடர்பில் இந்தியா இரகசியமாக புலனாய்வுகளை செய்து வருவதாகவும் பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்துள்ளார்.

அதாவது 2017 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இலங்கை வந்த புலனாய்வாளர்கள் நாட்டுக்கு திரும்பவில்லையெனவும், ராஜபக்ச குடும்பத்தினரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதே இவர்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய பணியாக காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையை குழப்புவதே இந்தியாவின் பொருளாதார இலாபம்

மேலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பாக பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்தினை ஆட்சிக்காக ராஜபக்ச குடும்பத்தினர் மூடிமறைக்கலாம் எனவும், எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கேள்விகளையெழுப்பி குழப்பத்தினை ஏற்படுத்துவார்கள் என்பதினை அறிந்தும் இந்த விடயத்தினை இந்தியா வெளியிட்டுள்ளதாக கொழும்பின் மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் இல்லையென்பது இலங்கைக்கும்,இராணுவத்திற்கும் ,உலக நாடுகளுக்கும் நன்கு தெரிந்தவையாகும்.

இருப்பினும், சாதாரண மக்களை குழப்பி உள்ளக அரசியலில் குழப்பத்தினை ஏற்படுத்தி தனது பொருளாதாரத்தை முன்னேற்றுவதே இந்தியாவின் நோக்கம் என்றும், இலங்கையை குழப்புவதே இந்தியாவின் பொருளாதார இலாபம் எனவும் எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தை அவர் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.