30 ஆண்டுகளில் முதல் முறை… ஆர்க்டிக்கில் அணு ஆயுத கப்பலை நிலைநிறுத்திய ரஷ்யா: பதற்றத்தில் மேற்கு நாடுகள்


30 ஆண்டுகளில் முதல் முறையாக அணு ஆயுத போர் கப்பலை ரஷ்யா ஆர்க்டிக்கில் நிலைநிறுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரமடையும் போர்

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கும் நிலையில், ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து போராட கூடுதலான ஆயுதங்கள் வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளிடம் முன்வைத்து வருகிறார்.

இதற்கிடையில் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைய இருக்கும் வேளையில், உக்ரைனிய எல்லையில் படைகளை குவித்து, மீண்டும் ஒரு புதிய முழுநீள தாக்குதலுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தயாராகி வருகிறார்.

30 ஆண்டுகளில் முதல் முறை… ஆர்க்டிக்கில் அணு ஆயுத கப்பலை நிலைநிறுத்திய ரஷ்யா: பதற்றத்தில் மேற்கு நாடுகள் | Putin Nuclear Armed Warships In Arctic After 30 YrEPA

இதற்காக இரு நாட்டு எல்லைகளிலும் 5,00,000 என்ற அளவிலான ராணுவ துருப்புகளை புடின் களமிறக்கி இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

30 ஆண்டுகளில் முதல் முறை

இந்நிலையில் 30 ஆண்டுகளில் முதல் முறையாக ஆர்க்டிக் பகுதியில் அணு ஆயுதம் தாங்கிய போர்க்கப்பல்களை ரஷ்யா நிலை நிறுத்தியுள்ளதாக புதிய உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

மேற்கு நாடுகளை எச்சரிக்கும் வகையில் அலாஸ்காவிற்கு அருகே ரஷ்யா தனது இரண்டு Tu-95 பியர் அணு குண்டு வீச்சை அனுப்பியுள்ளது.

30 ஆண்டுகளில் முதல் முறை… ஆர்க்டிக்கில் அணு ஆயுத கப்பலை நிலைநிறுத்திய ரஷ்யா: பதற்றத்தில் மேற்கு நாடுகள் | Putin Nuclear Armed Warships In Arctic After 30 Yr East2West

இது தொடர்பாக நோர்வே உளவுத்துறை அறிக்கை குறிப்பிட்டுள்ள தகவலில், “அணுசக்தி ஆற்றலின் முக்கிய பகுதியான நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கப்பல்கள் வடக்கு கடற்படையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது“ என தெரிவித்துள்ளது.

உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவிற்கு அணு ஆயுதங்களின் முக்கியத்துவம் கணிசமாக அதிகரித்துள்ளது.

பனிப்போரின் போது வடக்கு கடற்கரையில் முன்னாள் சோவியத் யூனியனின் கப்பல்கள் வழக்கமாக அணு குண்டுகளுடன் கடலுக்குச் சென்றன, ஆனால் நவீன ரஷ்யா உருவான பிறகு அணு ஆயுத கப்பல்கள் வடக்கு கடற்கரை பகுதியில் நிலை நிறுத்தப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை 

30 ஆண்டுகளில் முதல் முறை… ஆர்க்டிக்கில் அணு ஆயுத கப்பலை நிலைநிறுத்திய ரஷ்யா: பதற்றத்தில் மேற்கு நாடுகள் | Putin Nuclear Armed Warships In Arctic After 30 Yr



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.