கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நடிகை எமி ஜாக்ஸன் தனது காதலருடன் இருக்கும் நெருக்கமான போட்டோக்களை வெளியிட்டு தனது இரண்டாவது காதலை உறுதி செய்துள்ளார்.
எமி ஜாக்ஸன்தமிழ் சினிமாவில் கடந்த 2010ஆம் ஆண்டு ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகை எமி ஜாக்ஸன். பிரிட்டிஷ் நடிகையாகவும் மாடலாகவும் இருந்த எமி ஜாக்ஸனுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. Vaathi Review: க்ளைமேக்ஸ் வேற லெவல்.. வாத்தி படத்தை இன்ச் பை இன்ச்சாக விமர்சித்த பிரபலம்!
அச்சம் என்பது இல்லையேவிக்ரமுடன் தாண்டவம் மற்றும் ஐ படங்களில் நடித்தார் எமி ஜாக்ஸன். இதேபோல் தனுஷுடன் தங்க மகன், உதயநிதி ஸ்டாலினுடன் கெத்து, விஜய்யுடன் தெறி, ரஜினியுடன் 2.o ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் எமி ஜாக்ஸன். தற்போது தமிழில் அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து வருகிறார்.
SA Chandrasekhar: காதலர் தினத்தில் மனைவியுடன் ரொமான்ஸ்.. விஜய் அப்பா வெளியிட்ட போட்டோ!
காதல் முறிவுஎமி ஜாக்ஸன் லண்டனை சேர்ந்த ஜார்ஜ் பனாயிட்டோ என்ற தொழில் அதிபருடன் டேட்டிங்கில் இருந்தார். காதலிக்கும் போதே கர்ப்பமான எமி ஜாக்ஸன், திருமணத்திற்கு முன்பே ஆண் குழந்தைக்கு தாயானார். அதன் பிறகு எமி ஜாக்ஸன் பனாயிட்டோவின் காதல் முறிந்தது. இதையடுத்து அடிக்கடி காதல் கிசுகிசுவில் சிக்கி வரும் நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் எமி ஜாக்ஸன் காதல் உறவில் இருப்பதாக தகவல் பரவியது.
Leo, Trisha: கொட்டும் பனியில் த்ரிஷா.. தீயாய் பரவும் லியோ ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!
காதலருடன் எமி ஜாக்ஸன்இருவரும் அடிக்கடி வெளியில் ஒன்றாக செல்லும் போட்டோக்களும் வெளியாகி வந்தது. இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு எட் வெஸ்ட்விக்குடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து தனது காதலை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார் எமி ஜாக்ஸன். இந்த போட்டோவில் இருவரும் படு நெருக்கமாக உள்ளனர். இதுதொடர்பாக எமி ஜாக்ஸன் பதிவிட்டுள்ள இன்ஸ்டா போஸ்ட்டில் உங்களுடன் வாழ்க்கை ஹேப்பி வாலண்டைன் பேபி.. அன்புக்கு என்றென்றும் நன்றியுள்ளவளாக என குறிப்பிட்டுள்ளார்.
ரகசியமாய் காதலித்து திருமணத்தால் வைரலான டிவி நடிகை!
முதல் சந்திப்புஎமி ஜாக்ஸனின் இந்த பதிவை பார்த்த ரசிகர்களும் அவரது நண்பர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எமி ஜாக்ஸனும் எட் வெஸ்ட்விக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ரெட் சீ இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் பங்கேற்றபோதுதான் சந்தித்துக் கொண்டனர். அதனை தொடர்ந்து இருவரும் டேட்டிங் ஆரம்பித்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற லண்டன் பிலிம் ஃபெஸ்டிவலில் இருவரும் ரெட் கார்ப்பெட்டில் தோன்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Ravindar Chandrasekhar: மகாலட்சுமியை நான் உண்மையா காதலிக்கல… காதலர் தினத்தில் குண்டை தூக்கிப்போட்ட ரவீந்தர்!
Amy Jackson