Fire Boltt Quantum: 2,999 ஆயிரம் ரூபாய் விலையில் ப்ளூடூத் காலிங் வசதி!

ஸ்மார்ட் வாட்ச் விற்பனையில் இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் FireBoltt நிறுவனம் புதிதாக Quantum என்ற வாட்சை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்சில் HD தரத்தில் டிஸ்பிலே, 240 x 240 Pixels resolution போன்ற பல சிறப்பு வசதிகள் உள்ளன. இதில் நமக்கு கூடுதலாக 1.28 இன்ச் டிஸ்பிலே மற்றும் ப்ளூடூத் காலிங் வசதி உள்ளது. இதுதவிர IP67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட் பாதுகாப்பு உள்ளது.

விலை விவரம்

Fire-Boltt Quantum இந்தியாவில் 2,999 ஆயிரம் ரூபாய் விலையில் FireBoltt அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் Amazon ஆகிய தளங்களில் விற்பனை செய்யப்படும். இந்த வாட்ச் நான்கு வேரியண்ட்களில்
(Black, Green, Blue மற்றும் Black, Red)
கிடைக்கிறது.

Fire-Boltt Quantum விவரங்கள்

வாட்சில் 1.28 இன்ச் (240×240 Pixels), HD டிஸ்பிலே வசதி, ப்ளூடூத் காலிங், டிஸ்பிலே நம்பர் டயலிங், காண்டாக்ட் பதிவு, Google Assistant, Siri, ப்ளூடூத் 5.1, ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் iOS 9.0 OS கொண்டு இயங்கும் போன்களுக்கு ஆதரவு, Gesture வசதிகள் போன்றவை உள்ளன.

நமது உடல் ஆரோக்கியத்தை கணக்கிடவும் வகையில் பல சென்சார் வசதிகள் உள்ளன. இதில் SPO2, ஹார்ட் மானிட்டர், Sleep மானிட்டர், 50க்கும் மேற்பட்ட Watch face உள்ளது.

வாட்சில் 350mAh பேட்டரி உள்ளது. இது மொத்தமாக 7 நாட்கள் வரை சராசரி பயன்பாட்டில் இயங்கும். ப்ளூடூத் காலிங் வசதி பயன்படுத்தினால் நமக்கு 2 நாட்கள் நீடிக்கும். இதை முழுவதும் சார்ஜ் செய்ய 2 மணிநேரம் ஆகும். கூடுதலாக 128MB ஸ்டோரேஜ் வசதி, HR சென்சார், Accelerometer, மியூசிக் கண்ட்ரோல், ரிமோட் கேமரா கண்ட்ரோல், அலாரம் வசதி, டைமர், ஸ்டாப் வாட்ச், வானிலை நிலவரம் போன்ற பல விவரங்களும் உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.