கடந்த ஒரு மாதமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொசுப்புழுக்களின் உற்பத்தி அதிகரித்து, நோய் தொற்றும் பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதில், குறிப்பாக சென்னையின் முக்கிய ஆறுகலான கூவம், அடையாறு உள்ளிட்ட நீர்வழித்தடங்களில் டிரோன் எந்திரங்கள் மூலம் கொசுக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கழிவுநீர், மழைநீர் வடிகால் பகுதிகளிலும் கொசுக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், காலை, மாலை நேரங்களில் சென்னை முழுவதும் 3 ஆயிரத்து 312 மாநகராட்சி பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களும் தங்களின் வீடுகளுக்கு அருகேயும், மொட்டை மாடிகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த பொதுமக்கள் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை தங்களின் வீட்டு கதவுகளையும், ஜன்னலையும் மூடி வைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
இதற்க்கு பல்வேறு தரப்பில் வரவேற்பு வந்துள்ள நிலையில், சிலர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவதும், விமர்சனம் செய்தும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.