இது குட்டிப்புலி உறுமத்தான் செய்யும்.. ஆவேசமான ஜூனியர் கேப்டன்..!

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக பிரச்சாரத்திற்கு, திமுகவினர் இடையூறு ஏற்படுத்தியதால் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் ஆவேசமானார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணபாளையம் பகுதியில் தேமுதிக வினர், பிரச்சாரம் செய்த போது, அதே இடத்திற்கு பிரச்சாரத்திற்கு வந்த திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் ஆவேசமானார்.

இது கேப்டனின் கட்சி சவுண்டெல்லாம் யாரும் விடக்கூடாது என்றும், இந்த சீன் எல்லாம் லெட்டர் பேடு கட்சிகளிடம் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் பேசியதால் அங்கிருந்த தேமுதிகவினர் உற்சாக கூச்சலிட்டனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.