வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜகார்தா: இந்தோனேஷியாவின் தானிபார் தீவின் மலுகு பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி ஏற்படுமா என்ற அச்சம் வந்துள்ளது.
கடந்த சில நாட்களாக உலகின் பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்தியாவின் அசாம், மேகாலயா, ஜம்மு காஷ்மீர் போன்ற இடங்களிலும் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. நேற்று முன்தினம் (பிப்.,15) நியூசிலாந்திலும், நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலையில் இந்தோனேஷியா நாட்டில் மாலை 3:07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அந்நாட்டின் தானிபார் தீவின் மலுகுவில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement