சென்னை அண்ணாநகர் மேற்கு புதுகாலனியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி அம்மு. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், அம்முவுக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. அவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றுவதை பார்த்த சீனிவாசன், மனைவியை கண்டித்துள்ளார். இருந்தபோதிலும் அம்மு அதனை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு உறவுக்கு மறுத்ததால், இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. மேலும், தன்னுடைய உறவினர் மகனுடன் தான் உறவு கொள்ள முடியும் என அம்மு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், அம்முவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து டி.பி.சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீனிவாசனை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.எச்.முகமது பாரூக், திடீரென ஏற்பட்ட ஆத்திரத்தில் அம்முவை சீனிவாசன் கொலை செய்துள்ளார் என்றும், திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்றும் கூறி, அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாக 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.