பரூக்காபாத், உத்தர பிரதேசத்தில் குடும்ப தகராறில் மனைவியை சுட்டுக் கொன்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தின் பரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள மவுதர்வாஜா பகுதியில், உபேந்திரா என்பவர் மனைவி ஜோதி,30, மற்றும் 3 வயது குழந்தையுடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, கணவன் – மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது, மோதலாக வெடித்ததில், உபேந்திரா தன் துப்பாக்கியை எடுத்து ஜோதியை சுட்டார்.
இதில், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ஜோதி பலியானார். அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பி ஓடிய உபேந்திராவை தேடி வருகின்றனர்.
உயிரிழந்த ஜோதி, உபேந்திராவின் இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement