கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கும் மாற்று சமூகத்தினர்.. ஐகோர்ட் கிளை பிறப்பித்த அதிரடி ஆணை!

உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் தங்களை கோயிலில் வழிபாடு செய்யவிடாமல் தடுப்பதாகவும், மகா சிவராத்திரி விழாவில் தங்களை பூஜை செய்ய அனுமதிக்கக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில், அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
ராஜபாளையத்தைச் சேர்ந்த மேடையாண்டி எனபவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவில், அருள்மிகு மாதரசி அம்மன் கோயில் மற்றும் மேடையாண்டி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதனை குலதெய்வ கோயிலாகக் கொண்டுள்ள நாங்கள் வாழையடி வாழையாக வழிபட்டு வருகின்றோம்.
image
இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல், அந்த பகுதியில் வசிக்கக்கூடிய உயர் வகுப்பினர் சிலர், கோயிலுக்குள் சென்று எங்களை வழிபாடு செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். மேலும் இந்த கோயில் உயர் வகுப்பினருக்கு மட்டும்தான் சொந்தம் என உரிமை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலாகும். எனவே இந்த வருடம் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டு, பூஜை செய்து வழிபட எங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு தாக்கல் செய்திருந்தோம், ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே பட்டியல் வகுப்பைச் சார்ந்த எங்களை கோவிலில் வழிபட அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
Allocation of District Responsibilities to Karnataka High Court Judges;  Chief Justice orders | கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு மாவட்ட பொறுப்புகள்  ஒதுக்கீடு; தலைமை நீதிபதி உத்தரவு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “கோயில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது. அனைவரையும் சமமாக ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என குறிப்பிட்டு, அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் வழிபாடு செய்வதை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.