பாலியல் வழக்கு, கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா, 2019-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவானார். இந்துக்களுக்கு என தனி கைலாசா நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக பிரகடனபடுத்திய அவரை போலீசார் தேடி வரும் நிலையில், அவர் எங்கிருக்கிறார் என இதுவரை கண்டறிய முடியவில்லை.
அவ்வப்போது பக்தர்களுக்கு சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவுகளை சமூக வலைதளங்களின் மூலமாக ஆற்றி வருகிறார். இந்த நிலையில் அவர், கடந்த சில வாரங்களாக செயல்படாமல் இருந்தார்.
இதனால் அவருக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் அவர் மரணமடைந்து விட்டதாகவும் வதந்திகள் கிளப்பி வந்தனர். அவற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அவரே கைப்பட எழுதிய கடிதம் ஒன்றினை வெளியிட்டார்.
இந்த நிலையில் நித்தியானந்தா வசிக்கும் கைலாசா தீவு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பசிபிக் பெருங்கடலில் உள்ள கோஸ்டா ரிகா தீவுகளில் ஒன்று தான் கைலாசா தீவு என கூறப்படுகிறது. மேலும், நித்தியானந்தா பல்வேறு நாடுகளில் சில கோவில்களை விலைக்கு வாங்கியுள்ளதாகவும் அந்த கோவில்கள் மூலம் வருமானத்தை ஈட்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.