ஜப்பான் தூதுவர் மற்றும் ஆளுநர் இருவருக்கும் இடையில் விசேட சந்திப்பு திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (16) இடம்பெற்றது
அதன்போது கிழக்கு மாகாணத்திற்கு விவசாயம், தொல்பொருளியல், சுற்றுலா போன்ற துறைகளில் ஜப்பானின் புதிய முதலீட்டாளர்களை வரவழைப்பதற்கு வாய்ப்பேற்படுத்தித் தருமாறு ஆளுநர் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.
மேலும், திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் முதலீட்டிற்காக ஜப்பான் அரசாங்கம் ஊக்கப்படுத்துமாறும் ஆளுநர் அநுராதா யஹம்பத், தூதுவர் மிசுகொஷி ஹிதெகியிடம் கேட்டுக்கொண்டார்.