சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் பிப்.21-ம் தேதி வரை வறண்ட வானிலையே நீடிக்கும். தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. எனவும் குறிப்பிட்டுள்ளது.