அமெரிக்காவில் பெண்ணொருவர் தனது மகனுடன் சேர்ந்து அருவியில் குதித்து பலியான நிலையில், அவரது ஐந்து வயது மகன் உயிர் தப்பியுள்ளார்.
நயாகரா அருவி
இல்லினாய்ஸைச் சேர்ந்த 34 வயது பெண்ணொருவர், கடந்த 12ஆம் திகதி தனது கணவர் மற்றும் 5 வயது மகனுடன் விடுமுறையை கழிப்பதற்காக நயாகரா மாநில பூங்காவிற்கு வந்துள்ளார்.
அங்கு Goat Island-யில் உள்ள தண்டவாளத்தின் மீது ஏறிய குறித்த பெண், தன் மகனுடன் சேர்ந்து நயாகரா அருவியில் குதித்ததாக பொலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.
இதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார். அவரது உடல் Cave of the Winds வளாகத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது.
உயிர்தப்பிய சிறுவன்
அவரது மகன் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் பிழைத்தார். பள்ளத்தாக்கின் உறைந்த கரையில் அவர் குதித்துள்ளார்.
மீட்கப்பட்ட அச்சிறுவன் Buffalo-வில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து குறித்த பெண்ணின் கணவர் மற்றும் நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை முயற்சி
இதற்கிடையில், காவல்துறை அதிகாரியான கிறிஸ் ரோலா கூறுகையில், ‘விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இது ஒரு விபத்து என்று நாங்கள் நம்பவில்லை’ என தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்த சம்பவம் தற்கொலை முயற்சியாக கருதப்படுவதாக மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.