இயக்குநர் மோகன்ஜியின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் பகாசூரன். இயக்குநர் மற்றும் நடிகர் செல்வராகவன் லீட் ரோலில் நடித்திருக்கும் இந்த படம், அவரது தம்பியும் பிரபல நடிகருமான தனுஷின் ‘வாத்தி’-க்கு போட்டியாக களமிறங்கியது. தனுஷ் படத்திற்கு நிகரான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பகாசூரன் படம், பாக்ஸ் ஆஃபீஸ் வசூலிலும் நல்ல கலெக்ஷனை பெற்றுள்ளது.
லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் தகவலின்படி, முதல் நாளில் சுமார் 1 கோடி ரூபாய் வசூலித்துள்ளது இந்த படம். வாத்தியுடன் ஒப்பிடும்போது பகாசூரனுக்கு தயாரிப்பு செலவு மிக குறைவு. இந்த தொகை பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனிலேயே கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பகாசூரன் படக்குழு இருக்கிறது. இந்த படத்தை பொறுத்தவரை இயக்குநரான மோகன் ஜியே தயாரித்து இயக்கியிருகிறார். ஏற்கனவே திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்த மோகன்ஜி, பகாசூரன் படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதராமும் எடுத்திருக்கிறார்.
ராதாரவி, கே.ராஜன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். பகாசுரன் சேலத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை. மசாஜ் சென்டர்கள், ஆன்லைன் விபச்சாரம், விர்ச்சுவல் விபச்சாரம் என்ற பெயரில் சமூகத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்த விழிப்புணர்வை மக்களுக்காகவும், பெற்றோருக்காகவும் உருவாக்கப்பட்டுள்ள திரைக்கதை இந்தப் படம். விஜய்யின் பீஸ்ட் படத்துக்குப் பிறகு செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் இது. விமர்சனங்களும் ஓரளவுக்கு கலவையாக வந்திருப்பதால் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.