விமான நிலையத்தில் மட்டும் ‘ஜிம்‘ ஏன் இல்லை? ‘ஜிம்‘ கேட்டு அடம் பிடிக்கும் ராஷ்மிகா

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா எப்போதும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஷ்மிகா வெளியிட்டுள்ள பதிவில், “விமான நிலையத்தில் மட்டும் ‘ஜிம்‘ ஏன் இல்லை? நான் எப்போது விமான பயணம் செய்ய நேரிடுகிறதோ அப்போதெல்லாம், இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே விமான நிலையத்திற்கு வந்து விடுகிறேன். விமானம் வரும் வரை வெறுமனே ஏதோ யோசித்துக் கொண்டே இருப்பேன்.

அதே நேரம் விமான நிலையத்தில் ‘ஜிம்‘ இருந்திருந்தால் அந்த இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்து கொள்ளலாம் இல்லையா?“ என்ற குறிப்பிட்டு இருந்தார். அதோடு, “எனது இந்த ஆலோசனை நல்ல யோசனைதானே? எத்தனை பேருக்கு இது உபயோகப்படுமோ“ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு நடிகை காஜல் அகர்வால் பதிலளிக்கையில், ‘நானும் ஒவ்வொரு முறையும் இதே போல்தான் நினைத்துக் கொள்கிறேன். எனது வாழ்நாள் முழுவதும் இதுகுறித்தே யோசித்துக் கொண்டிருப்பேன்‘ என்று கூறி ஒரு சிரிக்கும் எமோஜியை வைத்தார். இவர்கள் இருவரின் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது. விரைவில் உங்களது கோரிக்கை நிறைவேற வேண்டும் என ரசிகர்களும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.