248 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட 17 வயது சிறுமி: துருக்கியை நான்கு முறை தாக்கிய நிலநடுக்கம்


248 மணி நேரத்திற்கு பிறகு துருக்கி நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து 17 வயது சிறுமியை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கம்

பிப்ரவரி 6ம் திகதி அதிகாலை மத்திய துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவை 7.8 என்ற முதல் பெரிய நிலநடுக்கம் தாக்கியது.

முதல் நிலநடுக்கத்தில் இருந்து சிறிது நேர இடைவெளியில் துருக்கியை 7.6 மற்றும் 6.0 என்ற ரிக்டர் அளவிலான மேலும் இரண்டு நிலஅதிர்வுகள் தாக்கின.

அத்துடன் பிப்ரவரி 13ம் திகதி அமெரிக்காவின் புவியியல் ஆய்வு (USGS) படி, துருக்கியின் தெற்கு நகரமான கஹ்ராமன்மாராஸில் 4.7 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் தாக்கியது.

248 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட 17 வயது சிறுமி: துருக்கியை நான்கு முறை தாக்கிய நிலநடுக்கம் | Turkey Earthquake Girl 17 Rescued After 248 HoursReuters 

செவ்வாய்கிழமையன்று உலக சுகாதார அமைப்பு, துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை ஐரோப்பாவில் 100 ஆண்டுகளில் இல்லாத “மோசமான இயற்கை பேரழிவு” என்று குறிப்பிட்டுள்ளது.

248 மணி நேரத்திற்கு பிறகு

இந்நிலையில் மூன்று நிலநடுக்கத்தை தாண்டி 248 மணி நேரத்திற்கு பிறகு துருக்கியின் நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து 17 வயது சிறுமியை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

தெற்கு மத்திய மாகாணமான கஹ்ரமன்மாராஸில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து 17 வயது சிறுமி மீட்பு படையினரால் மீட்டுள்ளார்.

248 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட 17 வயது சிறுமி: துருக்கியை நான்கு முறை தாக்கிய நிலநடுக்கம் | Turkey Earthquake Girl 17 Rescued After 248 HoursAP

துருக்கியில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டு 10 நாட்கள் கடந்து இருக்கும் நிலையிலும் மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து மக்களை வெளியேற்றி வருகின்றனர்.

இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 41,000 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.