கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்த OpenAI நிறுவனத்தை ட்விட்டர் நிறுவன தலைவராக இருக்கக்கூடிய எலன் மஸ்க் தொடங்கினார்.
அவர் அந்த நிறுவனத்தை சில நண்பர்களுடன் உருவாக்கினாலும் அதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு Board Member பதவியில் இருந்து விலகிவிட்டார். அதன் பிறகு Microsoft நிறுவனம் 2019 ஆம் ஆண்டு OpenAI நிறுவனத்தில் சுமார் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்து இதுவரை 10 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. மேலும் அந்த நிறுவனத்தை இயக்கி கட்டுப்படுத்திவருகிறது.
தற்போது ஒரு ட்வீட் மூலமாக “தங்கள் OpenAI நிறுவனத்தை தொடங்கிய காரணம் வேறு இப்போது அந்த நிறுவனம் இயங்கும் முறை வேறாக உள்ளது” என்று வருத்தம் தெரிவித்துள்ளார். அதாவது “அந்த நிறுவனத்தை ஒரு Open Source எனும் Google நிறுவனத்திற்கு மாற்றாக எந்த ஒரு லாப நோக்கம் இல்லாத நிறுவனமாக உருவாக்கியதாக தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது அந்த நிலை மாறி அது ஒரு லாபம் பெரும் நிறுவனமாக மாறி Microsoft நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இது தான் எண்ணியது இல்லை” என்று கூறியுள்ளார்.
OpenAI நிறுவனத்தின் ChatGPT இப்போது உலகளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் செயற்கை நுண்ணறிவு கருவியாக உள்ளது. இதற்கு போட்டியாக Google வெளியிட்ட Bard AI விட இது துல்லியமாக வேலை செய்கிறது.
இந்த் AI மூலமாக Google நிறுவனத்தின் ஆதிக்கத்தை ஒரு முடிவிற்கு கொண்டு வரமுடிடியும் என்று Microsoft நிறுவனம் எண்ணுகிறது. அதன் காரணமாகவே இப்போது Microsoft Bing உடன் இந்த ChatGPT AI தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. OpenAI ChatGPT கருவியை நீங்கள் இலவசமாக பயன்படுத்தமுடியும். ஆனால் அதில் சில முக்கிய வசதிகள் பயன்படுத்தவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்காக மாத சந்தா முறையில் பணம் செலுத்தவேண்டும்.
இந்த BingAI விரைவில் அனைவரின் பயன்பாட்டிற்கும் வரும் என்றும் மக்களுக்கு தேடல் செய்வது சுலபமானதாக இருக்கும் என்றும் Microsoft தெரிவித்துள்ளது. ஆனால் எலன் மஸ்க் லாப நோக்கம் இல்லாத ஒரு நிறுவனத்தை லாபம் சம்பாதிக்கும் நிறுவனமாக Microsoft மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
Google நிறுவனத்திற்கு மாற்றாக மக்களுக்கு சேவை அளிக்கும் விதமாகவே OpenAI தொடங்கப்பட்டதாகவும் ஆனால் அது தற்போது மாறிவிட்டதாக எலன் மஸ்க் தனது ட்வீட் மூலம் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். இதற்கு Microsoft நிறுவனம் இதுவரை எந்த ஒரு நேரடி பாட்டிலும் அளிக்கவில்லை.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்