ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் ஆர்டர் செய்த நபர் பணம் இல்லாததால், டெலிவரி பாயை கொலை செய்த கொடூரம்

கர்நாடகாவில் ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் ஆர்டர் செய்த நபர், அதனை கொடுக்க வந்த டெலிவரி பாயை கொலை செய்து, உடலை சாக்குப் பையில் வைத்து இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேம்நாத் தத் என்கிற நபர் ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஐ போன் ஆர்டர் செய்துள்ளான். ஐபோன் வீடு தேடி வந்தபோது, ஹேம்நாத் தத்தின் கையில் பணம் இல்லை. இதனையடுத்து ஐ போனை கொண்டு வந்த டெலிவரி பாயை கத்தியால் குத்தி கொலை செய்து, உடலை வீட்டில் பதுக்கி வைத்துள்ளான்.

3 நாட்கள் கழித்து உடலை சாக்குப் பையில் கட்டி, இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று அருகிலிருந்த ரயில் தண்டவாளத்தில் கிடத்தி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளான்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.