இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு: பிரதமர் மோடி| More employment for youth: PM Modi

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: உத்தரகண்ட் இளைஞர்களின் வளர்ச்சிக்கு பா.ஜ., முயற்சி எடுத்து வருகிறது. இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என பிரதமர் மோடி பேசினார்.

latest tamil news

ரோஸ்கர் மேளா திட்டம்:

ரோஸ்கர் மேளா என்பது இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு முக்கியத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களுக்கு வேகமாக ஆட்களை நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலம் ரோஸ்கர் மேளாவில், காணொலி வாயிலாக பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ், கடந்த சில தினங்களுக்கு முன், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி நியமன கடிதம் வழங்கியது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட பா.ஜ., ஆளும் அனைத்து இடங்களிலும் இது போன்ற பிரசாரங்கள் நடத்தப்படுகின்றன.

latest tamil news

உத்தரகாண்ட் இளைஞர்களின் வளர்ச்சிக்கு பா.ஜ., முயற்சி எடுத்து வருகிறது. இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். ஒவ்வொரு இளைஞர்களும் தங்கள் ஆர்வங்கள் மற்றும் திறன்களின் அடிப்படையில் புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் முன்னேறுவதற்கான வழிகளை உறுதிசெய்வது எங்களின் முயற்சியாகும்.

வேலைவாய்ப்பிற்காக இளைஞர்கள் தொலைதூர இடங்களுக்கு பயணம் செய்வதை எளிதாக்கும் வகையில், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.