உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவ திட்டமிட்டுள்ள பெரிய நாடு: மோசமான விளைவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை


உக்ரைன் போரில், ரஷ்யாவின் நட்பு நாடான சீனா ரஷ்யாவுக்கு உதவலாம் என வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவளிக்க சீனா திட்டமிட்டுவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அப்படி சீனா ரஷ்யாவுக்கு உதவுமானால், அது மோசமான விளைவுகளை உருவாக்கும் என்றும் அமெரிக்க தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அமெரிக்க மாகாணங்கள் செயலரான Antony Blinken, சீனா, ஆயுதங்கள் வழங்குதல் உட்பட பல்வேறு வகையான உதவிகளை ரஷ்யாவுக்கு வழங்க திட்டமிட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ், ரஷ்யப் படைகள் கொலை, சித்திரவதை, வன்புணர்வு மற்றும் நாடுகடத்தல் ஆகிய கொடூரமான செயல்களில் ஈடுபட்டுவருவதாக ரஷ்யா மீது குற்றம் சாட்ட, பதிலுக்கு அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர், அமெரிக்கா ரஷ்யாவை மோசமானதாக காட்ட முயல்வதற்காக இப்படியெல்லாம் குற்றம் சாட்டிவருவதாக விமர்சித்துள்ளது.  

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவ திட்டமிட்டுள்ள பெரிய நாடு: மோசமான விளைவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை | Ukraine News Latest War Russia Putin



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.