புதுடெல்லி: இந்தியாவில் கரோனாவுக்குப் பிறகு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அதிகரித்துள்ளன என்றும் கடந்த ஆண்டில் மட்டும்15,000 உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டுள்ள தாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் புஷன் கூறுகையில், “கரோனாவுக்குப் பிறகு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், 2022-ல் அது உச்சம் தொட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் 15,000 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் இந்தியாவில் செய்யப்பட்டுள்ளன. 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022-ல் உடல் உறுப்பு மாற்று எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்துள்ளது” என்றார்.