சென்னை: கலைஞர் பேனா நினைவுசின்னம் வைப்பதற்கு நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் 22பேர் ஆதரவு அளித்துள்ளதாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. ஜன.31ல் கலைவாணர் அரங்கில் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் நினைவு சின்னத்திற்கு 12 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று அரசு கூறியுள்ளது. மெரினா கடற்கரையில் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.