குளித்தலை இரும்பூதிப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயத்தில் இரு தரப்பினரிடையே மோதல்

கரூர்: தேனி கரூர் மாவட்டங்களில் நடந்த மாட்டுவண்டி பந்தயங்களில் 2 தரப்புக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பில் முடிந்தது. கரூர் மாவட்டம் இரும்பூதிப்பட்டி கிராமத்தில் பல்வேறு பிரிவுகளில் மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டன. இதில் கரூர் ஈரோடு, நாமக்கல், திருச்சி உள்பட்ட மாவட்டங்களை சேர்ந்த காளைகள், குதிரைகள் எல்லை கோட்டிலிருந்து சீறிப்பாய்ந்தன.

புதிய குதிரை பந்தயத்தின் போது குதிரை வண்டிகளின் பின்னால் வந்தவர்களின் வாகனங்களை விழா கமிட்டியினர் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாய்தகராறில் கைகலப்பில் முடிந்தது. இதே போன்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நடைபெற்ற போட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தில் முந்தி செல்வதில் இரண்டு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் இளைஞர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.