சும்மா அதிருதுல்ல..உக்ரைனுக்கு சர்ப்ரைஸ் விசிட் செய்த அமெரிக்க அதிபர்.!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் திடீர் பயணம் மேற்கொண்டது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர் தொடங்கிய பின் முதன் முறையாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்ற அமெரிக்க அதிபர், அங்கு உக்ரைன் அதிபரை சந்தித்தார்.

இது குறித்து அதிபர் பிடன் தனது டிவிட்டர் பதிவில், ‘‘ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு புடின் தனது படையெடுப்பைத் தொடங்கியபோது, உக்ரைன் பலவீனமாக இருப்பதாகவும் மேற்குலக நாடுகள் பிளவுபட்டுள்ளதாகவும் அவர் நினைத்தார். அவர் எங்களை மிஞ்சலாம் என்று நினைத்தார். ஆனால் அவர் எடுத்த முடிவு தவறானது என இப்போது உணர்ந்திருப்பார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் மிருகத்தனமான படையெடுப்பின் ஓராண்டு நிறைவைக் கொண்டாட உலகம் தயாராகி வரும் நிலையில், அதிபர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்து உக்ரைனின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கான நமது அசைக்க முடியாத மற்றும் உறுதியான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக நான் இன்று கீவ் சென்றுள்ளேன்’’ என கூறியுள்ளார்.

அமெரிக்காவின் ராஜதந்திரமும், ரஷ்யாவின் எதிர்வினையும்:

ஒருங்கிணைந்த சோவியத் யூனியனில் ரஷ்யாவும், உக்ரைனும் ஒன்றாக இருந்தன. சோவியத் யூனியன் பிளவுண்ட போது இரு நாடுகளும் தனித் தனியாக மாறின. எனவே வரலாற்று ரீதியாக ரஷ்யாவின் ஒரு பகுதி உக்ரைன் என ரஷ்யா கூறிவருகிறது. ஆனால் தாங்கள் தனித்துவமானவர்கள் என உக்ரேனியர்கள் கூறிவருகின்றனர். இந்தநிலையில் ரஷ்யாவின் தீவிர எதிரியான அமெரிக்கா தனது தலைமையிலான நேட்டோ படைகளை ரஷ்யாவின் எல்லையான உக்ரைனில் நிலை நிறுத்த திட்டமிட்டது.

அதற்கான ராஜதந்திர பணிகளை மேற்கொண்டது. வலதுசாரி நியோ நாஜிக்கள் என குற்றம்சாட்டப்படும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தலைமையிலான குழுவை தன்வயப்படுத்தியது அமெரிக்கா. அதைத் தொடர்ந்து. அமெரிக்கா தலைமையில் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார்.

கப்பிங் தெரபியின் பலன் எவ்வளவு நாளில் கிடைக்கும்?

தனது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என அதை எதிர்த்து ரஷ்யா போரை தொடங்கியது. ஒரு ஆண்டை தாண்டியும் இந்த போர் நீண்டு வருகிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. உக்ரைனை பின்னால் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இயக்கி வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறிவருகின்றனர். ரஷ்யா என்ற ஒற்றைநாடு, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட பலநாடுகளின் மறைமுகத் தாக்குதல்களை சமாளித்து வருகிறது.

ஓஹியோ ரயில் விபத்து; காற்றும், நீரும்… பதறும் அமெரிக்கா… ஒளிந்திருக்கும் பேரபத்து!

‘‘எங்கள் நாட்டை உங்களிடமிருந்து காப்பாற்ற எங்களுக்கு இதைவிட வேறு வழி கிடையாது. எங்களது கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் தக்க வைக்க இதுதான் எங்களுக்கு இருக்கும் ஒரே வழி’’ என ரஷ்யாவின் ஐநா தூதர் வசிலி நெபென்சியா தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.