சேப்பாக்கத்தில் கடைசி போட்டியில் விளையாட உள்ள தோனி!?

ஐபிஎல்-இன் இந்த சீசனில் தோனி ஓய்வு பெறுவார் என்றும், சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் அவருக்கு பிரியாவிடை கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்ட போது சிஎஸ்கே தோனியை 6 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது. சி.எஸ்.கே. உடன் தோனி தனது 15ஆவது ஆண்டை இந்த வருடம் நிறைவு செய்கிறார்.

இந்நிலையில் இந்த ஆண்டு தோனி ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுவார் என்றும், மே 14ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டமே, சேப்பாக்கத்தில் தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த உறுதி செய்யப்படாத தகவலை தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தோனி தலைமையில் சிஎஸ்கே நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

5 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று எம்.எஸ்.தோனி ஐபிஎல் தொடரில் இருந்து விடைபெறுவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் மே 16ஆம் தேதி போட்டி சேப்பாக்கத்தில் தோனி விளையாடும் கடைசி போட்டியாக இருந்தால் அன்றைக்கு பிரமாண்டமாக ஃபேர்வெல் நடத்த வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.