நீர் கட்டணமும் அதிகரிக்க கூடும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலையில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் தற்பொழுது மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரித்து தான் ஆக வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதோடு, அப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் இதன்போது பணிப்புரை விடுத்தார்.