ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் நேரத்தை வீணடிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மக்ரோன் நேரத்தை வீணடிக்கிறார்
இத்தாலிய நாளிதளழான Corriere Della Seraக்கு பேட்டியளித்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுடனான உரையாடலை ஊக்குவிப்பதற்காக இம்மானுவேல் மேக்ரான் நேரத்தை வீணடிப்பதாக தெரிவித்தார்.
இது ஒரு பயனற்ற உரையாடலாக இருக்கும், உண்மையில் மேக்ரான் நேரத்தை வீணடிக்கிறார், ரஷ்ய அணுகுமுறையை எங்களால் மாற்ற முடியாது என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பழைய சோவியத் சாம்ராஜ்யத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற அவரது கனவில் ரஷ்யா தங்களை தனிமைப்படுத்தி கொள்ள முடிவு செய்திருந்தால், அதை பற்றி நாங்கள் எதுவும் செய்ய முடியாது எனவும் பேட்டியில் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்து இருந்த கருத்தை தொடர்ந்து ஜெலென்ஸ்கி இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
ரஷ்யாவை தோற்கடிக்க நினைக்கவில்லை
கடந்த வெள்ளிக்கிழமை, உக்ரைனில் ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம் ஆனால் அதை நசுக்க விரும்பவில்லை என்று மேக்ரான் தெரிவித்து இருந்தார்.
AFP | Getty Images
சிலர் நினைப்பது போல், ரஷ்யாவை அதன் சொந்த மண்ணில் தாக்கி ரஷ்யாவை மொத்தமாக தோற்கடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
இது ஒருபோதும் பிரான்சின் நிலைப்பாடாக இருந்ததில்லை, அது ஒருபோதும் எங்கள் நிலைப்பாடாக இருக்காது என்றும் ஜனாதிபதி மேக்ரான் தெரிவித்திருந்தார்.