வைரலாகும் மறைந்த நடிகர் மயில்சாமி வீட்டின் முன் எழுதியிருக்கும் வாசகம்..!

நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவராத்திரியையொட்டி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார். மயில்சாமி மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆரம்ப காலத்திலிருந்து வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். எந்த நடிகரையும் காப்பி அடிக்காமல் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி மேலே வந்தவர். தன்னை போல் திறமையுடன் இருக்கும் நபர்களுக்கு வாய்ப்புகளை வாங்கிக் கொடுப்பார்.

இந்நிலையில் அவருடைய சேவை மனப்பான்மை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிவபக்தரான அவர் எப்போதும் யாரை பார்த்தாலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அழைத்து செல்வார். சிவனடியாராகவே மாறி தொண்டு செய்து வந்தார். அதோடு மழை, புயல், வெள்ளம் காலங்களில் விருகம்பாக்கம், சாலிகிராமம் பகுதிகளில் ஏழை மக்கள் வயிறார உணவு சாப்பிடுகிறார்கள் என்றால் அது மயில்சாமி கொடுத்த உணவாக இருக்கும்.

அதிலும் அவருடைய தெருவில் தண்ணீர் தேங்கிய நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அவருடைய இல்லத்திற்கு அருகில் தன்னுடைய சொந்த செலவில் உணவுகளை சமைத்து அவரே ஒவ்வொருவரும் இல்லங்களிலும் சென்று வழங்கி வந்தார். அதன் பிறகு புயல் காலகட்டங்களிலும் ஏழை மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து இருக்கிறார்.

அத்துடன் கொரோனா ஊரடங்கு சமயத்தில் வருமானமின்றி தவித்த ஏராளமான ஏழை குடும்பங்களுக்கு சமையலுக்கு தேவையான பொருட்களை தன்னுடைய சொந்த செலவில் வழங்கினார். அதற்காக பலரிடம் கடன் வாங்கியும் உதவியுள்ளார்.

ஒரு கட்டத்தில் கடன் அதிகமானதன் காரணமாக தன்னுடைய வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்து ஏழைகளுக்கு உதவி செய்தார். அப்படி கொரோனா காலத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை சமீபத்தில்தான் மயில்சாமி மீட்டார்.

வாழ்க்கையில் பிறந்தோம் இறந்தோம் என இல்லாமல் நடுவில் வாழும் காலத்தில் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என நினைப்பார். அதை கொள்கையாகவே நினைத்து வாழ்ந்தவர் மயில்சாமி.

மயில்சாமியின் வீட்டின் முகப்பில் நல்லவன் வாழ்வான் என்ற வாசகமும் மறு புறம் அன்பே கடவுள் இல்லம் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. அது போல் அவரது வீட்டில் பெரிய சைஸில் விநாயகர் படமும் வைக்கப்பட்டுள்ளது. நல்லவன் வாழ்வான், அன்பே கடவுள் ஆகிய இரண்டுமே வாழ்க்கைக்கு முக்கியமான தத்துவம் ஆகும். இவரது உதவும் குணத்தை பார்க்கும் பிறர் தாமும் வாழ்வில் இப்படி உதவலாம் என்ற ஒரு இன்ஸ்பிரேஷனை ஏற்படுத்திவிட்டார் மயில்சாமி என்றே சொல்லலாம்.

ஒரு ஆர்டிஸ்ட் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் சாதாரணமாக வேட்டியை கட்டிக் கொண்டு மக்களோடு மக்களாக தெரு ஓரம் உள்ள கடைகளில் டீ குடிப்பார் என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.