#கடலூர்: குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற நபரால்.. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.! 

கடலூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை  கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஒருவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டம் செய்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரண்டு மாத காலமாக ஊரை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில்  குடும்பத்துடன் நாடோடியாக திரிவதாக தெரிவித்த அவர்  தனது புகாரின் பேரில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக தாசில்தார் பலராமன் மற்றும் புதுநகர் போலீசார் விசாரணை செய்வதாக கூறியதையடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு அதிகாரிகளிடம் மனுவை வழங்கினார். விசாரணையில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்   பண்ருட்டி வட்டத்தில் உள்ள  வீரசிங்க குப்பம் என்ற கிராமத்தைச் சார்ந்த  சரவணன் என்பது தெரிய வந்திருக்கிறது. 

இவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் அந்த கிராமத்தில் வசித்து வந்திருக்கிறார். சிலர் இவரது மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதற்கு எதிராக அவர் புகார் கொடுத்ததன் காரணமாக அவரை ஊரை விட்டு வெளியேற்றி உள்ளனர். அவரது வீட்டையும் அடைத்து உடைத்து இருக்கின்றனர்.

இது தொடர்பாக அவர் எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்தும்  எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அவரது சொந்த கிராமத்தில்  வயதான தாய் மற்றும்  ஊனமுற்ற மூத்த மகனாகியோர் தனியாக இருப்பதால் எதிர் தரப்பு நபர்கள் அவர்களுக்கு தொல்லை கொடுக்க கூடும் என பயந்து புகார் கொடுக்க வந்திருக்கிறார் சரவணன். மேலும் எதிர் தரப்பில் அவரது வீட்டை தாக்கி காரையும் சேதப்படுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக முத்தாண்டி குப்பம் காவல் நிலையத்திலும்  எஸ் பி அலுவலகத்திலும் புகார் அளித்திருக்கிறார். காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தி இரு தரப்பினரும் சமரசமாக சென்றுள்ளதாக  சரவணனுக்கு பதில் மனுவை தாக்கல் செய்திருக்கின்றனர். தன்னிடம் உரிய முறையில் விசாரணை நடத்தாமலேயே  காவல்துறை பதில் மனுவை அளித்திருக்கிறது என இந்தப் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார் சரவணன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.