கருத்தடை சாதனங்களைத் தடை செய்த தாலிபான்கள்! ஆப்கானில் பெண்களுக்கு எதிராக தொடரும் அராஜகம்


மேற்கத்திய நாடுகளின் சதி தான் கருத்தடை சாதனங்களை அதிக அளவில் பயன்படுத்துவதற்கான காரணம் எனத் தெரிவித்து, ஆப்கானிஸ்தானில் பெண்கள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்த தாலிபான் அரசு தடை விதித்துள்ளது.


முற்போக்கு சிந்தனையில் தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி செய்து வருகிறார்கள். கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவப் படை வெளியேறிய பிறகு, ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள் அந்நாட்டில் பல திட்டங்களை செயல்படுத்தி மக்களை முற்போக்கு தனமான சிந்தனைக்குத் தள்ளுகிறார்கள் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான சட்டங்கள்

பெண்கள் படுதா அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும். ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் வெளியே செல்லக் கூடாது. பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது எனப் பல சட்டங்களை தாலிபான்கள் பிறப்பித்துள்ளனர்.

கருத்தடை சாதனங்களைத் தடை செய்த தாலிபான்கள்! ஆப்கானில் பெண்களுக்கு எதிராக தொடரும் அராஜகம் | Taliban In Afghanistan Bans Contraceptive DevicesReuters

அத்துடன் தாலிபான்களின் ஆட்சியில் பெண்களுக்கு சுதந்திரமேயில்லை என ஏற்கனவே பெண்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

மேலும் பெண்கள் உயர் கல்வி கற்கக் கூடாது என கூறும் தாலிபான்களுக்கு எதிராக அந்நாட்டின் கல்வியாளர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில் பெண்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவதால் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை குறையும் என்றும், மேற்கத்திய நாடுகள் இதனை திட்டமிட்டு செய்து வருகிறது எனவும் தாலிபான்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


கருத்தடை சாதனங்களுக்கு தடை

 உலக அளவில் ஆப்கானிஸ்தான் பெண்கள் போதிய மருத்துவ வசதி இல்லாததால் அதிக அளவில் பிரசவத்தின் போது உயிரிழக்கிறார்கள் என தகவல் கூறுகிறது. 

கருத்தடை சாதனங்களைத் தடை செய்த தாலிபான்கள்! ஆப்கானில் பெண்களுக்கு எதிராக தொடரும் அராஜகம் | Taliban In Afghanistan Bans Contraceptive DevicesReuters

இந்நிலையில் பெண்கள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்த கூடாது என்ற தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தாலிபான்களின் இந்த அறிவிப்பால் பெண்களின் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.