கரும்பு தின்ன கூலி! கஞ்சா சுவைக்க ₹88 லட்சம் சம்பளம்!

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கஞ்சாவை வைத்திருந்தாலே குற்றம் என்று கைது செய்யப்படும் நிலையில், ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனம் கஞ்சாவை சுவைக்கும் வேலைக்கு ரூபாய் 88 லட்சம் சம்பளம் என அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரும்பு தின்ன கூலியா என்பது போல் பலர் இதற்கு விண்ணப்பித்துள்ள நிலையில் வேலைக்கான விண்ணப்பம் குவிந்துள்ளது. ஜெர்மனியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கஞ்சா உபயோகிக்கலாம் என அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியின் சுகாதார அமைச்சர் மரிஜுவானாவை  பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கும் யோசனையை முன்மொழிந்த நிலையில் கஞ்சாவை குறிப்பிட்ட அளவு பயன்படுத்துவது சட்டபூர்வமானதாக ஆக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் ஒரு சில நிபந்தனைகளுடன் பொதுமக்கள் கஞ்சா பயன்படுத்தலாம் என்றும் அனுமதி பெற்ற மருந்து கடைகள் மற்றும் கடைகளில் மக்கள் கஞ்சாவை வாங்கிக் கொள்ளலாம் என்றும் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. எனினும் ஒரு நபர் 30 கிராம் வரை கஞ்சாவை பயன்படுத்த அனுமதி என்று விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. மேலும், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் கஞ்சா பயன்படுத்த அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெர்மனியில் கஞ்சா மருந்து பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று கஞ்சாவை ருசி பார்த்து மதிப்பீடு செய்வதற்காக கஞ்சாவை ருசிக்க ஒருவரை வேலைக்கு அமர்த்த முடிவு செய்து விளம்பரம் செய்தது.  இந்த வேலைக்கு இந்திய மதிப்பில் 88 லட்சம் ரூபாய் வரை சம்பளம் தருவதாகவும் அறிவித்தது. இந்த விளம்பரத்தை பார்த்து ஏராளமானோர் விண்ணப்பம் செய்தனர். 

மேலும் படிக்க | உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம்! ஒரே நேரத்தில் 40+ ரயில்கள் நிற்கலாம்!

எனினும்,  கஞ்சாவின் மணம், சுவை ஆகியவற்றை உணரும் திறமை உள்ள நபர்கள் இந்த வேலைக்கு எடுக்கப்படுவார்கள் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறிய இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட்சன், நாங்கள் தயாரிக்கும் கஞ்சா மருந்துகளை ஆஸ்திரியா, கனடா, போர்ச்சுக்கல், மாஸிடோனியா, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்கிறோம் என்றும் இந்த கஞ்சா மருந்துகளின் தரகட்டுப்பாட்டை கண்காணித்து உறுதி செய்யவே ஒருவரை  நியமிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், விண்ணப்பதாரர் கஞ்சா நிபுணராக இருக்க வேண்டும் என்பதோடு ஜெர்மன் மரிஜுவானாவை புகைக்கும் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என கூறப்படுகிறது. போதை தரும் இந்த வேலை மிகவும் எளிது என நினைத்து ஏராளமானோர் விண்ணப்பம் செய்துள்ள நிலையில், இதுவரை யாருமே இந்த வேலைக்கு தகுதி பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | முரப்பா நகரம் புதிய காபாவை உருவாக்கும் முயற்சி! சவுதியில் கிளம்பியுள்ள சர்ச்சை!

மேலும் படிக்க | பாகிஸ்தான் சென்ற இந்திய குரங்குக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! கை விரிக்கும் வனத்துறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.