சர்ச்சை பேச்சு! “ஒரு இந்து பெண்ணுக்கு 10 இஸ்லாமிய பெண்கள்”!!

கர்நாடகாவில் லவ் ஜிகாத் தொடர்பாக ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வருடங்களாக, அதுவும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு பேச்சு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்மையில் பாஜக எம்.பி., பிரக்யா சிங் தாக்குர், இந்துக்கள் வீடுகளில் ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டும் என பேசியிருந்தார்.

அவரது பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது லவ் ஜிகாத் தொடர்பாக கர்நாடகாவில் ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் பேசியிருப்பது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய ஆண்கள், இந்து பெண்களை திட்டமிட்டு காதலித்து, மதம் மாற்றம் செய்வதாக இந்து அமைப்பினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அதற்கு லவ் ஜிகாத் என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் ப்ரமோத் முத்தாலிக் கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், நம் நாட்டில் இந்து பெண்களை காதலித்து மதம் மாற்றம் செய்வது அதிகரித்து வருவதாக கூறினார்.

அப்படி லவ் ஜிகாத்தில் நாம் ஒரு இந்து பெண்ணை இழந்தால், இந்து மதத்தை சேர்ந்த ஆண்கள் 10 இஸ்லாமிய பெண்களை காதல் வலையில் வீழ்த்த வேண்டும் என்று அவர் கூறினார். அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களுக்கு ஸ்ரீராம் சேனா அமைப்பு துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.