சர்வதேச அளவில் அதிக வருவாய் ஈட்டும் நாடுகளில் ஒன்றாக சவுதி அரேபியா திகழ்கிறது. இங்கு வேலை தேடி செய்யும் இந்தியர்கள் ஏராளம். உலகிலேயே மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபாவை வடிவமைத்து திக்குமுக்காட வைத்தனர். அந்த வகையில் தொடர்ச்சியாக புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ’தி லைன்’ என்ற பெயரில் புதிய நகரை உருவாக்க தீவிரம் காட்டி கொண்டிருக்கிறது.
நவீன ரியாத் நகரம்இதில் சாலைகள் கிடையாது. கார்கள் கிடையாது. கார்பன் உமிழ்வே கிடையாது. இங்கு கோடிக்கணக்கான மக்களை குடியேற்றம் செய்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் உலகின் மிகப்பெரிய நவீன நகரமாக சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தை மாற்ற திட்டமிட்டுள்ளனர். இதற்கான முன்னெடுப்பை சவுதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எடுத்துள்ளார்.
நியூ முராப்பா திட்டம்இந்த திட்டத்திற்காக ’நியூ முராப்பா’ மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். ’முகாப்’ என்ற பெயரில் பிரம்மாண்ட கட்டுமானத்தை உருவாக்கி சர்வதேச அளவில் புதிய அடையாளத்தை உருவாக்க முடிவு செய்துள்ளனர். இது 400 மீட்டர் உயரம், 400 மீட்டர் அகலம், 400 மீட்டர் நீளம் கொண்டு கன சதுர வடிவில் அமையப் போகிறது. இந்த முகாப் உலகின் மிகப்பெரிய கட்டுமானமாக திகழப் போவது குறிப்பிடத்தக்கது.
சும்மா அதிருதுல்ல.. உக்ரைனுக்கு சர்ப்ரைஸ் விசிட் செய்த அமெரிக்க அதிபர்.!
சவுதி வெளியிட்ட வீடியோ
சவுதி அரேபிய நடவடிக்கைநியூ முராப்பா எனப்படும் பிரம்மாண்ட கட்டுமானத்தில் அனைத்து விதமான வசதிகளையும் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான திட்ட வரைவு வீடியோ சவுதி அரேபிய அரசால் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரிதும் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த நியூ முராப்பா கட்டுமானம் நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் பில்டிங்கை விட 20 மடங்கு பெரியது.
தொழில்நுட்ப வசதிகள்ஹாலோ க்யூப் வடிவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அருங்காட்சியகம், தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம், மல்டி பர்போஸ் தியேட்டர், 80க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார அரங்குகள் இருப்பதாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. நியூ முராப்பா திட்டத்தில் 25 மில்லியன் சதுர கிலோ மீட்டரில் பரந்து விரிந்து வரவுள்ளது.
பிரத்யேக போக்குவரத்துஇதில் 1,04,000 குடியிருப்புகள், 9 ஆயிரம் ஓட்டல் அறைகள், 9,80,000 சதுர மீட்டரில் வர்த்தக பகுதிகள், 1.4 மில்லியன் சதுர மீட்டரில் அலுவலக பகுதிகள், 6,20,000 சதுர மீட்டரில் ஓய்வெடுக்கும் பகுதிகள், 1.8 மில்லியன் சதுர மீட்டரில் சமூக கூடங்கள் உள்ளிட்டவை அமையவுள்ளன. இதற்கென்று பிரத்யேக போக்குவரத்து வசதிகள் செய்யப்படவுள்ளன.
2வது ஆண்டாக அண்டார்டிகாவில் பனி பரப்பு குறைந்தது; பேரிடற்கு தயாராகுங்கள்.!
வேலைவாய்ப்பும், வருமானமும்விமான நிலையத்தில் 20 நிமிடங்கள் பயணித்தால் இந்த பகுதிக்கு செல்லலாம். இதன் முழுமையான கட்டுமானம் வரும் 2030ஆம் ஆண்டு நிறைவு பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூ முராப்பா திட்டத்தின் மூலம் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். 180 பில்லியன் சவூதி ரியால்கள் வரை வருமானம் ஈட்டப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது.