பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் தேசிய பாதுகாப்பு பேரவையை சட்டமாக்குவதற்கு தீர்மானம்

தேசிய பாதுகாப்புபேரவையை பாராளுமன்ற சட்டத்தின் மூலம் சட்டப்பூர்வமாக்குவதற்கு, சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இன்று (21) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக்க கருணாரத்னவும் கலந்துகொண்டார்.

கடந்த ஜனவரி 12 ஆம் திகதி அன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தேசிய பாதுகாப்பு அரசியலமைப்பு அடிப்படையில் மற்றும் தெளிவான அமைப்புடன் நிறுவ வேண்டியதன் அவசியத்தை பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

இது தொடர்பாக நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ள்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

07. தேசிய பாதுகாப்பு சபை தாபிப்பதற்கான சட்டமூலம்

1999 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையின் தேசிய பாதுகாப்பு சபையானது தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் ஜனாதிபதி அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும்இ மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்ளூர்இ சர்வதேசஇ பொருளாதார மற்றும் இராணுவக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை மேற்கொள்கின்ற அடிப்படை நிறைவேற்று நிறுவனமாக இயங்குகின்றது.

2023.01.12 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் தேசிய பாதுகாப்பு சபைக்கு நியதிச்சட்ட முறையுடனும் மற்றும் தெளிவான கட்டமைப்புடன் கூடியதாக தாபிக்க வேண்டிய தேவை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கமையஇ தேசிய பாதுகாப்பு சபை பாராளுமன்ற சட்டத்தின் பிரகாரம் சட்டபூர்வமாக்குவதற்கு இயலுமாகும் வகையில் சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.