பிரித்தானியாவில் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு: இறக்குமதி பற்றாக்குறை தீர்க்கப்படுமா? அரசு விளக்கம்


பிரித்தானியாவில் கடந்த சில தினங்களாக தக்காளிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் முக்கிய சந்தைகளான டெஸ்கோ மற்றும் சைன்ஸ்பரிஸ் ஆகியவற்றிலுள்ள பல்பொருள் அங்காடி நிறுவனங்களில் தக்காளி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அறுவடை பாதிப்பு

தென் ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள வெப்பமான காலநிலை காரணமாக பயிர் சரியாக விளையவில்லை எனத்  தெரியவந்துள்ளது.

இதனால் அறுவடையில் கடுமையான பற்றாக்குறை நிலவியுள்ள காரணத்தால் ஏற்றுமதி செய்யக்கூடிய நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் போனதாக தெரிய வந்துள்ளது.

பிரித்தானியாவில் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு: இறக்குமதி பற்றாக்குறை தீர்க்கப்படுமா? அரசு விளக்கம் | Uk Facing Tomatoes Shortage After Export DisruptedReuters 


உக்ரைன் போரால் ஏற்பட்ட தட்டுப்பாடு

பிரித்தானியாவின் பல்பொருள் அங்காடிகள் விநியோக சிக்கல்களை தீர்ப்பதில் சிறப்பாக செயல்படுவதால் விவசாயிகளுடன் இணைந்து செயல்பட்டு காய்கறி தட்டுப்பாடுகளை தீர்க்கும் என உணவு இயக்குனர் ஆண்ட்ரு ஓபி கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு உக்ரைன் போரினால் பிரித்தானிய விநியோகஸ்தர்கள் காய்கறிகள் கிடைப்பதில் பல சிக்கல்களை சந்தித்தார்கள். ஆனாலும் கிறிஸ்துமஸ்க்கு முன்பாக முட்டைகள் குறிப்பிட்ட விகிதத்தில் விற்பனை செய்து எப்படியோ பிரச்சனையை சமாளித்தது.

பிரித்தானியாவில் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு: இறக்குமதி பற்றாக்குறை தீர்க்கப்படுமா? அரசு விளக்கம் | Uk Facing Tomatoes Shortage After Export DisruptedAFP


கோடைக்காலங்களில் பற்றாக்குறை

குளிர்காலங்களில் தென் ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவிலிருந்து கிட்டத்தட்ட 90% உணவுகளை பிரித்தானியா இறக்குமதி செய்கிறது. கோடைக் காலங்களில் மட்டும் பெரிய அளவில் தட்டுப்பாடு  ஏற்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.