இதுவரை IPL போட்டிகள் இந்தியாவில் இணையத்தில் Disney+ Hotstar மூலமாக ஒளிபரப்பப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் ஐபில் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமத்தை jio Cinema பெற்றது.
இதனால் இந்த ஆண்டு புதுவிதமான வசதிகளை மக்களுக்கு வழங்க ஜியோ நிறுவனம் தயாராகிவருகிறது. இந்த ஆப் கடந்த Qatar 2022 கால்பந்து உலகக்கோப்பையில் ஒளிபரப்பு உரிமத்தை பெற்று சிறப்பாக போட்டிகளை நேரலையில் புது விதமான வசதிகளுடன் ஒளிபரப்பியது.
இதனால் இதன் ஐபில் ஒளிபரப்பும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டிகளை முதல் முறையாக HD தரத்தை விட நான்கு மடங்கு தரம் கொண்ட 4K ஸ்ட்ரீமிங் முறையில் ஒளிபரப்ப செய்ய jio Cinema திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் ஒளிபரப்பாகும் ஐபில் போட்டிகள் பெரும்பாலும் SD (480P Standard Definition) மூலமாகவே ஒளிபரப்படுகிறது. ஆனால் முதல் முறையாக ஐபில் போட்டிகளை 10 மடங்கு கூடுதல் திறனுடன் நாம் பார்க்கமுடியும்.
Chat வசதி
நாம் போட்டிகளை நேரலையில் பார்த்துக்கொண்டே மற்றவர்களுடன் போட்டியை பற்றி Chat செய்யமுடியும். இது Portrait Mode மூமாக நமட்டுமே நம்மால் பயன்படுத்தமுடியும். இதில் Poll (வாக்கெடுப்பு) வசதியும் உள்ளது.
Multi Angle View
நாம் கிரிக்கெட் போட்டிகளை பலவிதமான கோணங்களில் பார்க்க எதுவாக நமக்கு இந்த Multi Angle View வழங்கப்படுகிறது. மொத்தமாக மைதானத்தில் இருக்கும் 6 கேமெராக்களில் ஸ்பைடர் கேமரா, பேட்டர் வியூ, Birds Eye வியூ, விக்கெட் கீப்பர் வியூ போன்ற சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கேமரா ஆப்ஷன்களும் உள்ளன.
Hype Mode
இந்த மோட் மூலமாக நம்மால் போட்டியின் நடுவே முக்கிய விவரங்களை சுலபமாக தெரிந்துகொள்ளமுடியும். இது கிட்டத்தட்ட Twitter Feed போன்றது.
Play Along
போட்டியின் நடுவே நமக்கு சில விளையாட்டு போட்டிகள் நடைபெறும். அதில் நாம் கலந்துகொண்டு வெற்றிபெற்று பரிசுகளை பெறலாம்.
Jio Media Cable
இந்த புது வித கேபிள் வசதி ஐபில் 2023 தொடங்குவதற்கு முன்னதாக அறிமுகம் செய்யப்படும். இந்த புதிய Dongle மூலமாக நாம் நமது மொபைல் போன்களை நமது டிவி உடன் இணைத்து போட்டிகளை பார்க்கலாம்.
இது அனைத்து விதமான தொலைக்காட்சிகளிலும் பார்க்கமுடியும். இது சாதாரண டிவியை கூட ஸ்மார்ட் டிவியாக மாற்றிவிடும். இதன் விலை 500 முதல் 1000 ரூபாய் இருக்கும் என்று தெரிகிறது. இதன் வசதிகள் எதிர்காலத்தில் மேம்படுத்தப்படும் என்றும் ஜியோ தெரிவித்துள்ளது.
4K வீடியோ தரம்
கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக HD தரத்தை விட நான்கு மடங்கு சிறந்த தரத்துடன் படங்களை காட்டும் 4K தொழில்நுட்பத்தில் நாம் இனி IPL 2023 போட்டிகளை காணலாம். இதுவரை இந்தியாவில் 4K தரத்தில் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பாகவில்லை. இதுவே இந்தியாவில் முதல் முறை ஆகும்.
12 இந்திய மொழிகளில் ஒளிபரப்பு
இதுவரை இந்தியாவில் ஐபில் போட்டிகள் 6 மொழிகளில் மட்டுமே ஒளிபரப்பட்டன. இப்போது 12 மொழிகளில் ஒளிபரப்பாகும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. போட்டிகளை நாம் English, Hindi, Bhojpuri, Punjabi, Tamil, Malayalam, Marathi போன்ற பல மொழிகளில் காணமுடியும். இதனால் பல மாநில மக்கள் இனி ஐபில் போட்டிகளை அவரவர் தாய் மொழியில் கண்டு ரசிக்கமுடியும்.
Jio Glass
ஜியோ நிறுவனம் அதன் புதிய Technology Sun Glass ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. இதன் விலை 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். இதனால் நாம் இதை அணிந்துகொண்டு போட்டிகளை 2D மற்றும் 360 டிகிரி அளவில் போட்டிகளை பார்க்கலாம்.
360 Degree கேமரா
நாம் போட்டிகளை 360 டிகிரி அளவில் பார்க்க சுற்றியும் 8K கேமரா வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. நம்மால் போட்டிகளை பார்க்கும்போது கேமரா நகர்த்தி 360 டிகிரி கோணத்தில் இதில் வேண்டுமானாலும் போட்டிகளை பார்க்கமுடியும்.
Jio Dive VR
VR முறையில் 360 டிகிரி கேமரா வசதியுடன் போட்டிகளை பார்க்க Jio Dive என்ற கருவி அறிமுகம் செய்யப்படும். இதன் விலை 1000 ரூபாய் இருக்கும். இது இரண்டு வகையான அனுபவத்தை மக்களுக்கு வழங்கும்.
ஒன்று மிகப்பெரிய 100 இன்ச் டிவி மூலமாக நாம் போட்டிகளை பார்த்தால் எப்படி இருக்குமோ அந்த அனுபவம் கிடைக்கும். இண்டாவதாக நம்மால் 360 டிகிரி கோணத்தில் நமது தலையை அசைத்து எந்த திசையிலும் போட்டிகளை பார்க்கமுடியும். இடையில் விளம்பரங்களாக Display Ads, Intersection Ads, 360 Degree Ads, 3D Product Ads என நான்கு வகையான விளம்பரங்கள் வரும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்