அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளைய தினம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இதுதொடர்பான தகவல் வெளியானதும் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டும்
எடப்பாடி பழனிசாமி
பல்வேறு நகர்வுகளை முன்னெடுத்தார். அனைத்து தீர்மானங்களும் செல்லாது என்று சி.வி.சண்முகம் அதிரடியாக பேச ஓபிஎஸ் தரப்பு அதிர்ந்து போனது. அதன்பிறகு மிகுந்த அவமானத்திற்கு ஆளாக்கி ஓ.பன்னீர்செல்வத்தை வெளியேற வைத்தனர். பின்னர் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார். இதனை
ஓ.பன்னீர்செல்வம்
தரப்பு எதிர்க்க அவரை கட்சியில் இருந்து நீக்கினர். இதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனி அணியாக பிரிந்து செயல்பட தொடங்கினர்.