கேரளாவை சேர்ந்த நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான சுபி சுரேஷ் காலமானார். அவருக்கு வயது 42.
பல வருடங்களுக்கு முன் ஏசியாநெட்டில் ஒளிபரப்பான சினிமாலா என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் சுபி சின்னத்திரையில் அறிமுகமானார். கனகசிம்ஹாசனம், காரியஸ்தான், ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ், எல்சம்மா என்ன ஆங்குட்டி, பச்சகுதிர உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் மேட் ஃபார் ஈச் அதர், குட்டி பட்டாளம் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெயர் பெற்றவர். கல்லீரல் பாதிப்பு காரணமாக சுபி ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடுமையான கல்லீரல் பாதிப்பு பிரச்னையுடன் அவர் ஜனவரி 28ஆம் தேதி ஆலுவாவில் உள்ள ராஜகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சுபிக்கு மஞ்சள் காமாலை இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
நுரையீரல் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை அளிப்பது கடினமாக இருந்ததாக தெரியவந்துள்ளது. சுபியின் மறைவுக்கு மலையாள திரையுலகினர் மற்றும் சின்னத்திரை வட்டாரத்தினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறது.
அதேபோல் கேரளாவை சேர்ந்த நடிகர், நடிகைகள், சின்த்திரை கலைஞர்கள் தொடர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.04
newstm.in