உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் தொடங்கி ஓராண்டு கிட்டதட்ட நெருங்கிவிட்டது. இருந்தாலும் ரஷ்யா நினைத்தது போல உக்ரைனை அவ்வளவு எளிதில் ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் உக்ரைன் படைகளும் ரஷ்யாவிற்கு கடுமையான பதிலடி கொடுத்தது.
உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே உக்ரைன் பக்கம் நிற்கும் அமெரிக்கா, உக்ரைனுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறது. அதேபோல், ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளையும் விதித்து வருகிறது. இப்படி பல்வேறு வழிகளில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா நின்று வரும் நிலையில், இன்று அந்த நாட்டின் அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். உக்ரைன் தலைகர் கீவ் நகரில் அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஜோ பைடன் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று இருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் யாரும் எதிர்பாரத வகையில் உக்ரைன் சென்றார். கடைசி வரை அவரது பயண விவரம் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது . போருக்கு மத்தியில் ஜோ பைடைனின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் முதலில் ஜோ பைடன் போலந்து செல்ல திட்டமிட்டருந்தார். எதிர்பாராதவிதமாக முதலில் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி ஓராண்டு ஆகும் நிலையில் பைடன் சென்றுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
உக்ரைன் அதிபதிர் ஜெலென்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் பைடன் கீவ் நகரில் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகின. உக்ரைன் – ரஷியா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் கீவ் நகருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சென்றது ரஷியாவிற்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.