லக்னோ: உத்தரபிரதேசத்தில் 2023-2024 ம் ஆண்டிற்கான பட்ஜெட் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசு செயல்படுகிறது. 2023-2024 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் சுரேஷ் கன்னா இன்று (பிப்.,22) சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த அரசின் ஏழாவது பட்ஜெட் இதுவாகும்.
இதையடுத்து சுரேஷ் கன்னா பேசியதாவது: உத்தரபிரதேச அரசு தாக்கல் செய்த மிகப்பெரிய பட்ஜெட்களில் இதுவும் ஒன்று. உள்கட்டமைப்பு மேம்பாடு, சுகாதாரத் துறை மற்றும் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
2023-2024ம் ஆண்டிற்குள், மாநிலத்தில் உள்ள 2.26 கோடி குடும்பங்களுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் சுத்தமான மற்றும் தூய குடிநீரை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ திட்டத்திற்காக, 465 கோடி ரூபாயும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
முதல்வர் யோகி:
பட்ஜெட் குறித்து, உ.பி., முதல்வர் யோகி ஆதியத்நாத் கூறியிருப்பதாவது: உ.பி.,யின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட் உதவும். அடுத்த 5 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கு இந்த பட்ஜெட் அடித்தளமாக அமையும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது ஒரு மைல்கல்லாக இருக்கும் எனக் கூறினார்.
அகிலேஷ் யாதவ்:
பட்ஜெட் குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியிருப்பதாவது: உ.பி முதல்வரும் நிதியமைச்சரும் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் நலனுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வேலையில்லா திண்டாட்டத்திற்கும் எந்த தீர்வும் இல்லை எனக் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement