டெல்லி: அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானத்தில் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள நுவார்க் நகரில் இருந்து டெல்லி வந்துகொண்டிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 300 பயணிகளுடன் டெல்லி வந்துகொண்டிருந்த விமானம் சுவீடனின் ஸ்டாக்ஹோமில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
