திருவனந்தபுரம்: கேரளத்தில் 15 மாத குழந்தையின் சிகிச்சைக்கு அடையாளம் தெரியாத நபர் ரூ.11 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். எர்ணாகுளம் செங்கமநாட்டை சேர்ந்த சாரங், அதிதி தம்பதியின் குழந்தைக்கு முதுகு தண்டுவட தசை செயலிழப்பு நோய் ஏற்பட்டது. குழந்தையின் சிகிச்சைக்கு அமெரிக்காவில் இருந்து மருந்து வரவழைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவில் இருந்து மருந்தை வரவழைத்து சிகிச்சை அளிக்க ரூ.17.4 கோடி செலவாகும் என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் செய்வதறியாது தவித்த சாரங் – அதிதி தம்பதியினர், குழந்தையின் சிகிச்சைக்காக நல் உள்ளம் படைத்தோரிடம் நன்கொடை கோரினர். தம்பதியினர் கோரிக்கையை ஏற்று பெற கூற விரும்பாத நன்கொடையாளர் ஒருவர் ரூ.11 கோடியை வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். குழந்தை சிகிச்சைக்கு ஒரே நபர் ரூ.11 கோடி நன்கொடை செலுத்திய சம்பவம் கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.