கொள்முதல் நிலையங்களில் கையூட்டு பெறுவதா? – அதிரடி காட்டிய அமைச்சர் சக்கரபாணி!

விவசாயிகளிடமிருந்து கடந்த காலங்களில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும்போது முறைகேட்டில் ஈடுபட்ட 90 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் தற்பொழுது 3500க்கும் மேற்பட்ட நேரடி நெல்கொள் முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து பணியாளர்கள் கையூட்டு பெறுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்து வந்தன.

இதனை ஆய்வு செய்ய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி  குழு அமைத்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி கடந்த காலங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும்போது முறைகேட்டில் ஈடுபட்ட பணியாளர்கள், கணினி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் என 90 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாய பெருமக்களிடம் கையூட்டு பெறுவதாக வரும் புகார்களை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, முறைகேட்டில் ஈடுபட்ட கொள்முதல் நிலைய பணியாளர்கள் 90 பேர் கடந்த வாரம் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். (1/3)#TNPDS pic.twitter.com/CNruQ2w4PV
— R.SAKKARAPANI (@r_sakkarapani) February 21, 2023

மேலும் டெல்டா மாவட்டங்களில்  கூடுதல் பதிவாளர் தலைமையில் 9 விழிப்பு பணி குழு அதிகாரிகள் தற்போதும் தொடர்ந்து தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருவதாகவும் ஆய்வின் முடிவில் முறைகேட்டில் யாரேனும் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்

முறைகேடுகளை முற்றிலுமாக ஒழித்து, கொள்முதல் நிலையங்களின் முழுமையான பயனை உழவர்கள் பெறும் வகையில் கழக அரசு உரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. (3/3)
— R.SAKKARAPANI (@r_sakkarapani) February 21, 2023

முறைகேடுகளை முற்றிலுமாக ஒழித்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் பயன்களை உழவர்கள் முழுமையாக பெறக்கூடிய  வகையில் இந்த அரசு செயல்பட்டு வருவதாகவும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி குறிப்பிட்டிருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.