சென்னை அயனாவரம் பகுதியில் ரவுடியை பெண் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளார்.
சென்னை அயனாவரம் பகுதியில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது 3 பேர் அவ்வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை உதவி ஆய்வாளர் சங்கர் தடுத்த நிறுத்த முயன்றார். அப்போது இருசக்கரத்தில் வாகனத்தில் வந்தவர்கள் சங்கரை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் போலீசார் 2 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
இதில் ரவுடி பெண்டு சூர்யா என்பவர் தலைமறைவானார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பெண்டு சூர்யா பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் பெண்டு சூர்யாவை கைது செய்தனர். ஆனால் திடீரென பெண்டு சூர்யா போலீசாரை கத்தியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார்.
இதையடுத்து அயனாவரம் எஸ்.ஐ மீனா, பெண்டு சூர்யாவின் முழங்காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் காயமடைந்த ரவுடி பெண்டு சூர்யாவை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.